Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் செய்தி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் செய்யாறு, திண்டிவனம் ஆகிய இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது.

ஆலை அமைந்தவுடன் இந்த வருட இறுதிக்குள் இந்த தொழிற்சாலையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த ஆலையில் இருசக்கர வாகனத்திற்கு தேவையான அனைத்து உதிரிபாகங்கள் தயாரிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் திண்டிவனம், செய்யாறு ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |