Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதில் குறிப்பாக சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 10,11-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |