Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்….வெளியான அதிரடி உத்தரவு…!!!!

பொதுத்தேர்வுகளை குறித்து அரசு தேர்வுத்துறை இயக்கம் புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை கற்றனர். மேலும் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து கொரோனா  2-ஆம் அலையின் பாதிப்புகளால், தமிழக அரசு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பாடங்களை விரைவாக முடிக்க தீவிர ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கு 2-ஆம் திருப்புதல் தேர்வுகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகள் குறித்து தமிழக அரசுத்தேர்வுகள் துறை தற்போது புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் தேர்வு கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும்.இதை தொடர்ந்து காவலர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகளானது  பூட்டப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பொதுத்தேர்வு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |