தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் 10,11,12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேரடி வகுப்பிற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து நேரடி வகுப்புகளை ரத்து செய்வது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை முடிவடைந்தவுடன் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.