Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை…. நாளை (மார்ச்.2) வெளியீடு…. திடீர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை நாளை (மார்ச்.2) வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில்  சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதாவது மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 2 வருடங்களாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்ததால், பிப் 1ஆம் தேதியில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

அதே நேரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளிவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவருக்கும் “ஆல் பாஸ்” வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு கண்டிப்பாக பொதுதேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணையானது தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அட்டவணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. எனினும் பொதுத்தேர்வு கால அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் உள்ளதால், பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும், அதற்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை இன்று (மார்ச்.1) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை நாளை (மார்ச்.2) வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |