தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்படும்.ஆசிரியர்களும் தங்களை மாணவர்களை பொது தேர்விற்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும் அறிவித்துள்ளார்.