இன்று முதல் 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப் படவில்லை. அதனால் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பொது தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி 12 ம் வகுப்பு பொது தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி முடிவடைந்து உள்ளது. 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்துள்ளது. அதனால் மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையில் இருக்கின்றர் . இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் இன்று முதல் திருத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நேற்று நடந்து முடிந்த 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி முதல் திருத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17ஆம் தேதியும், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.