தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வை எழுத மாணவர்களுக்கும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன .
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது