Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.தமிழகத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து வகை பாடப்பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு 1500 ரூபாய் ஊக்க தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு இந்த உதவி தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக முழுவதிலும் நடைபெற இருக்கும் இந்த தேர்வு குறித்த முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 50% பிறப்பள்ளி மாணவர்கள் 50% தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்வில் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பத்திற்கு 50 ரூபாய் கட்டணத்தை செலுத்தி செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்குள் தங்களது தலைமை ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |