தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவ்வாறு எந்தவித பரிசீலனையும் நடைபெறவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் பேட்டியளித்து அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்கான திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.