தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களுக்கு இடையே முன்பதிவில்லா 11 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனியில் இருந்து மதுரைக்கு நவம்பர் 10 ஆம் தேதியிலிருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.மதுரையில் இருந்து பழனிக்கு வரும் நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து காலை 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவையில் இருந்து பழனிக்கு வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி முதல் மதியம் 2.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
பழனியில் இருந்து கோவைக்கு நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இதனைப் போலவே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும், திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செங்கோட்டை திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும். இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.