தமிழகத்தில் 11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் விதமாக 11 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலி பணியிடம் இல்லாத இடங்களுக்கு வேறு நகராட்சி ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்படி கரூர் கமிஷனர் எஸ்.ராமமூர்த்தி என்பவர் என்.விஸ்வநாதன் அவர்களுக்கு பதிலாக கோவை மாநகராட்சி துணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனத்திற்கும், பல்லவபுரம் நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ் அவர்கள் டிஎம்டி.ஆர்.சரஸ்வதி அவர்களுக்கு பதிலாக உதகமண்டலம் நகராட்சிக்கும் , எஸ்.லட்சுமி காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் அவர்கள் ஓ.ராஜாராம் அவர்களுக்குக்கு பதிலாக மறைமலைநகர் நகராட்சி ஆணையராகவும், ஓ.ராஜாராம் அவர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பதிலாக கோவில்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
மேலும் ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது காலியாக உள்ள பணியிடத்திற்கு ஆர்.சந்திரா அவர்களும், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரிந்த கே.ஜெயராமராஜா மற்றும் பி.ஏகராஜ் அவர்கள் தற்போது ராணிப்பேட்டை நகராட்சிக்கு பி.ஏகராஜ் அவர்களும், திருப்பத்தூர் நகராட்சிக்கு கே.ஜெயராமராஜா அவர்களும், உடுமலைப்பேட்டை பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடத்திற்கு பி.சத்தியநாதன், குடியாத்தம் பேரூராட்சிக்கு இ.திருநாவுக்கரசு, கடையநல்லூர் பேரூராட்சிக்கு ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி பேரூராட்சிக்கு எம்.முத்துக்குமார் நியமனம் செய்யப்டுள்ளனர்.