Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில்…. இதை செய்தால் கடும் நடவடிக்கை…. காவல் துறை உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |