தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதிக்குப்பின் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தூத்துக்குடி ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.