தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது மக்களை சற்று குளிர்ச்சியை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.