Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. அலெர்ட், அலெர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முருக்கேரி ஹனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் மதகடிப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், தருமபுரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.

Categories

Tech |