Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. சென்னை -புதுச்சேரி இடையே நேற்று இரவு 100 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து வந்ததால் நள்ளிரவுக்கு பிறகு மழையும் குறைய தொடங்கியது. கடலோரப் பகுதிகளில் மட்டும் பலத்த காற்று வீசியது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |