Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11,000 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டும் படித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் எட்டாம் வகுப்பு வரை உள்ள 11,251 அரசு பள்ளிகள், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 14 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரிய வந்துள்ளது. எதற்காக இந்த பள்ளிகளுக்கு 10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்று முதல் 30 மாணவர்கள் எண்ணிக்கையில் எட்டாம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே 31 முதல் 100 மாணவர்கள் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையில் 13 ஆயிரத்து 27 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 567 பள்ளிகளிலும் பராமரிப்பு நிதியாக தலா 25,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |