Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளில் பாடம் கற்க முடியாமல் போனது. அதனால் ஸ்மார்ட் போன் மூலம் பாடம் கற்கும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று தேர்வினை எழுதி முடித்தனர். நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்திய சில சலுகைகளை அரசு தவிர்த்து வரும் நிலையில் ஒன்று, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து அந்த மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |