Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது .

இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில்  நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட ஜிடிஎன் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் 12ம் வகுப்பு முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு நிறுவனம் சார்பாக பயிற்சி வழங்கப்படும்.பயிற்சியை முடித்தவுடன் பணி நியமன கடிதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |