தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பி.ஏ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும் பி.ஏ.5 வகை தொற்று 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உருமாறிய ஒமிக்ரான் தோற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவத்தார்.