தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் தெரிவித்துள்ளது.