Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சித்தமருத்துவ மையம் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கபசுரக் குடிநீர், தாளிசாதி, சூரணம், சுக்கு கஞ்சி உள்பட பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |