Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக பகுதிகளின் மேல்நிறவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி தமிழகத்தில்  திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, தென்காசி, இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும்‌ தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் லட்சத்தீவு,தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |