Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “12-ம் வகுப்பு மாணவர்களுக்கு”…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை விரைந்து முடிக்க வேண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 10 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும் என வெளியிடப்பட்டது.

இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23-ம் தேதியும் வெளியாகும். இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம் வர்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நெருங்கி வருகிறது. இதற்கான பணிகளை அனைத்து பள்ளிகளிலும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த செய்முறைத்தேர்வு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி மே 2-ம் தேதி முடிகிறது. இந்த தேர்வு முடிவடைந்தவுடன் மே 4-ம் தேதிக்குள் செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |