Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் இதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், தருமபுரி மாவட்டகளில் ஓரிரு இடகளில் கனமழையும் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு கோயம்புத்தூர் மற்றும் வட தமிழகத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 32 குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழையாக சேலத்தில் 9 சென்டிமீட்டர். சிவகங்கை மாவட்டம் திருவோணம்  7 சென்டிமீட்டர்.

ராஜபாளையம் 6 சென்டிமீட்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டா புறம் பெருங்குடி மாவட்டம் அரூரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக சூறாவளி காற்று மணிக்கு 40 இருந்து 50 கிலோ மீட்டர் வரை அவ்வபோது 60 கிலோ மீட்டர் வேகத்தில் விசா வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Categories

Tech |