Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 நாட்கள் முழு பொதுமுடக்கம்…. மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் தினசரி கொரோனா  பாதிப்பு 8500 ஆக அதிகரித்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடு தேவையா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு பொதுமுடக்கம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை சார்பாக மனு கொடுத்துள்ளனர்.

Categories

Tech |