Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் வானமே மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |