மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மேலப்பருத்தி குடி என்ற கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டனர்.அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஜூன் 27ஆம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயற்சி செய்தன. அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று மூன்று விவசாயிகள் 18 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய முடிவு செய்தனர். அதனால் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க மேல பருத்தி குடி மற்றும் கீழ பருத்தி குடி, காலணி தெரு உள்ளிட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 144 தடை உத்தரவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.