Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்ட அரசு பள்ளிகளில் இனி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை கலைய 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றோம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக 15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துக்களில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு படிப்படியாக இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விளைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8:15 – 8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |