Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15000 புதிய வீடுகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் இதனை போலவே புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த நான்கு வருடங்களில் 27 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |