தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 16 பொறியியல் கல்லூரிகள் மூடப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கொரோனா சூழலும், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.