Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்….. இந்த 2 நாட்கள் அதீத கனமழை…. அலர்ட்… அலர்ட்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை காஞ்சிபுரம், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், தர்மபுரி கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யும். நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும்.. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழ்நாடு கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும்.

இதனால் 10ஆம் தேதி  கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா  மாவட்டங்களிலும், 11ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை, பெரம்பூர் பகுதியில் 14 சென்டி மீட்டர், செய்யூர், மதுராந்தகம், சோழவரத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

Categories

Tech |