தமிழகத்தில் மொத்தம் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 739 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு 205, கோவை 173, தஞ்சை 111, திருவள்ளூர் 107, காஞ்சிபுரம் 76, திருவாரூர் 43, சேலம் 37, திருச்சி 37, திருப்பூர் 36, நாகை 32, வேலூர் 33, குமரி 28, கடலூர் 25, ஈரோடு 20, மதுரை நாமக்கலில் தலா 18 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது