தமிழகத்தில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தியது. அதன் பலனாக தமிழகத்தின் பரோன பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டு வந்ததை அடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பல மாவட்டங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா பரவலுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்என்றும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.