Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வருகிற 11-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 7-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து இடங்களில் லேசான மற்றும் கன மழை பெய்யும்.

இதனையடுத்து செப்டம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் கன மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கன மழை பெய்யும். மேலும் வருகிற 7-ம் தேதி மற்றும் 8-ம் தேதிகளில்‌ குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரளா-கர்நாடக கடலோர பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |