தெற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அதன் பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகாலை முதல் பெய்து வரும் மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.