Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |