Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் மையம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 17 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல்,மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுவை பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழைவரை பெய்யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் மிக கன மழையும் 16 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.

Categories

Tech |