தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுப்பு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் இனிவரும் நாட்களில் நாளுக்கு நாள் மழை பொழிவு அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.