தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மருத்துவத் தேவைகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் .11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த திமுக அரசு முயற்சி செய்து வருகிறது.
மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. ஒவ்வொரு தலைமை மருத்துவமனைக்கும் 50 கோடி நிதி என்றவகையில் 950 கோடி வழங்க வலியுறுத்தப்படும். தமிழகத்தில் 19 மாவட்டங்களில் உள்ள வட்ட மருத்துவமனைகளையும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அ
தன்படி தாம்பரம், மயிலாடுதுறை, ஓசூர், திண்டிவனம், அருப்புக்கோட்டை, அறந்தாங்கி, குன்னூர், பழனி, திருப்பத்தூர் மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட 19 வட்டம் மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை ஏற்றியதால் மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம் டெல்லியில் நடக்கிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.