Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் நேற்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. கேரளாவில் கடந்த மே 18ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |