Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?…. இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனுடன் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 29 ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை – காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |