Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (மார்ச் 1)மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதையடுத்து வருகிற 3ஆம் தேதி தமிழக கடலோரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04/03/2022 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மற்றும் திருச்சி, மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன்பின் 05.03.2022 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மற்றும் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |