மத்திய தொழிற் சங்கங்கள் வருகிற 28, 29 போன்ற தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள திமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது. இதனிடையில் வேலை நிறுத்தம் நடக்ககூடிய 28, 29 போன்ற தினங்களில் தமிழ்நாட்டில் அனைத்து ஆட்டோக்களும் இயங்காது என அதன் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து பேசி அன்றைய தினம் ஆட்டோக்களை இயக்ககூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் இருக்கின்றன.
மேலும் தொழிலாளர்கள் விரோதம் போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடக்கிறது என்று அவர் கூறினார்.