வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பிக் போட்டி முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளார். இந்நிலையில் சென்னையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பிரதமர் பங்கேற்கும் நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Categories