Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அரசு….!!!!!

பிரபல அமைச்சர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.  ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நமது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது   தமிழகத்தில் 366.2 மி.மீ மழையாக பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,  நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் கனமழையும்,  சில இடங்களில் லேசான மழையும் வருகின்ற 7,8,9 ஆகிய தேதிகளில் பெய்யும்   என அறிவித்திருந்தது.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள்  பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கான நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்  முகாமிட்டு முன்னெச்சரிக்கை மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல துணை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து அணைகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து  ஆகியவற்றை  கண்காணிக்க வேண்டும், உபரி நீர் வெளியேறும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதல் அலுவலர்களுடன் இயங்குகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |