தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும். அதுமட்டுமன்றி தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளது.