பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக்கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுதும் வங்கி ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் வாரக்கணக்கில் கூட நடைபெறும். இதன் காரணமாக பொதுமக்களுக்கான வங்கிச்சேவைகள் கடுமையாகப் பாதிக்கும். பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மே 30, 31 போன்ற தேதிகளில் ஸ்ட்ரைக் நடைபெறும் என்று பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் அறிவித்தனர்.
அந்த வகையில் மே 30, 31 போன்ற தேதிகளில் நாடு முழுதும் வங்கி கிளைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் பேரணி, தர்ணா ஆகிய போராட்டங்களில் ஈடுபட போவதாக தகவல் இணையம் முழுவதும் வைரலாகி வந்தது. எனினும் தற்போது முக்கியமான அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. அதாவது வங்கிகள் வருகிற 30, 31 ஆம் தேதிகளில் வழக்கம்போல் செயல்படும். வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் என வெளிவரும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என வங்கி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூறியதாவது “கிளைகள் குறைப்பு, ஊழியர்கள் பணியிடமாற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள், வருகிற 30, 31 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய இருந்தனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்ககூட்டமைப்பு மற்றும் நிர்வாகம் இடையில் நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். ஆகவே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என வெளியான தகவல் தவறானது ஆகும். இதனை பொது மக்கள் நம்ப வேண்டாம். ஆகவே தமிழகத்தில் வருகிற 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.