Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று  கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இன்று  தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Categories

Tech |